'LOVE ANTHEM' பயம் இருந்தது : மனம் திறக்கும் சிம்பு! - Silambarasan
Headlines News :
Home » » 'LOVE ANTHEM' பயம் இருந்தது : மனம் திறக்கும் சிம்பு!

'LOVE ANTHEM' பயம் இருந்தது : மனம் திறக்கும் சிம்பு!

Written By Narasimman on 25 Mar 2012 | 16:35



ரொம்பவும் மெனக்கெடாமல், மனதில் பட்டதை அப்படியே பேசுபவர் சிம்பு.

சிம்பு நடித்து வரும் ' வேட்டை மன்னன் ' படம் குறித்தும், தான் தயார் செய்து வரும் LOVE ANTHEM குறித்தும் அவர் கூறியிருப்பது :

" வேட்டை மன்னன் ஒரு கேங்ஸ்டர் படம். ஆனால் கேங்ஸ்டர் படம் என்றால் ரொம்ப ROUGH-வாக எல்லாம் இருக்காது. ரொம்ப LIGHT HEARTED காமெடியாக மக்களுக்கு பிடிக்கும் வகையில் சொல்லி இருக்கிறோம்.

தொழில்நுட்பத்தில் தரம் உயர்ந்ததாக இப்படம் இருக்கும். எனது படங்களில் மிகுந்த பொருட்செலவில் தயாராகி வரும் படம் ' வேட்டை மன்னன் '.

படத்தில் மூன்று நாயகிகள் இருக்கிறார்கள். கணேஷ், சந்தானம் என்ற எனது அணியில், இப்படத்தில் சந்தானம் கிடையாது. கணேஷ் நடிக்கிறார்.

படத்தின் முதல் பாதி முடியும் தருவாயில் இருக்கிறது. பிரேசில் நாட்டில் இரண்டாம் பாதியை படப்பிடிப்பு நடத்த இருக்கிறோம். 'வானம்' படத்திற்கு பிறகு ' வேட்டை மன்னன் ' படத்தில் என்னுடன் யுவன் இணைகிறார்.

எப்போதும் நானும் யுவனும் சேர்ந்தால் பாடல்களுக்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருக்கும். இப்படத்தின் பாடல்களும் நன்றாக அமையும் என்று நினைக்கிறேன்.

என்னுடைய LOVE ANTHEM வீடியோவிற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஷக்தி இப்படத்தில் பணியாற்றி வருகிறார். நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் நான் பண்ணும் இரண்டாம் படம் இது.

என்னுடன் 'மன்மதன்', 'வல்லவன்' படங்களில் பணியாற்றிய நெல்சன், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். விஜய் டிவியில் 'ஜோடி நம்பர் ஒன்' இயக்கியவர் இவர் தான். இவர் இல்லையென்றால் நான் ' ஜோடி நம்பர் ஒன் ' ஷோ செய்து இருக்க மாட்டேன்.

இப்படத்தில் ஒரு பாடல் பாடுகிறேன். என்னுடைய பாணியில் ஒரு பாடலும் எழுதுகிறேன். நானும் யுவனும் கூட்டணி சேர்ந்தாலே ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்று நினைப்போம். இப்படத்திலும் அவ்வாறு நிறைய விஷயங்கள் செய்ய இருக்கிறோம். கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.

YOUTUBEல் LOVE ANTHEM நிறைய பேர் பார்க்க வேண்டும் என்ற முனைப்புடன் எல்லாம் நான் செய்யவில்லை. இப்போதைக்கு நான் இறுதி வடிவம் எல்லாம் நான் வெளியிடவில்லை. சும்மா ஒரு TEASER தான் வெளியிட்டோம்.

அந்த TEASER எதற்கு என்றால் இந்த மாதிரி ஒரு CONCEPTல் நான் பணியாற்றி கொண்டு இருக்கிறேன் என்பதை தெரிவிக்க தான். அதற்கே இந்த மாதிரி ஒரு வரவேற்பு கிடைக்கும் என்று நினைக்கவில்லை.

ஏனென்றால் முழுவதும் ஆங்கில வார்த்தைகள் அடங்கியது.. அதை எப்படி மக்கள் எடுத்து கொள்வார்கள் என்பதில் எனக்கு மிகவும் பயமாக இருந்தது. அதில் வரும் ஒரே தமிழ் வார்த்தை ' காதல் ' மட்டும் தான்.

அமெரிக்காவிற்கு சென்று LOVE ANTHEM-க்கு இறுதிவடிவம் கொடுத்து விட்டேன். இன்னும் 1 அல்லது 2 மாதங்களில் அது தயாரானதும் வெளியிடுவேன். " என்று கூறியிருக்கிறார்.
Source: Cinema : Cinema Vikatan
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Silambarasan - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger